நாலடியார் – 01:09 – செல்வம் நிலையாமை
உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான்
துன்ன அரும் கேளிர் துயர் களையான் கொன்னே
வழங்கான் பொருள் காத்து இருப்பானேல் அஆ
இழந்தான் என்று எண்ணப்படும்
நாலடியார் 9 – சொல் பொருள் விளக்கம்
ஈயாதவன் பொருள் எல்லாம் இழப்பான்! உண்ணாமல் பொருளைக் காத்துக்கொண்டிருப்பவன் அதனை இழந்தவனாகவே கருதப்படுவான்.
உண்ணான் – இன்றியமையாத உணவுகளை உண்ணாமலும், ஒளி நிறான் – மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், ஓங்கு புகழ் செய்யான் – பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய புகழைச் செய்துகொள்ளாமலும், துன் அருகேளிர் துயர் களையான் – நெருங்கிய பெறுதலரிய உறவினரின் துன்பங்களை நீக்காமலும், வழங்கான் – இரப்பவர்க்கு உதவாமலும், கொன்னே பொருள் காத்திருப்பானேல் – ஒருவன் வீணாகச் செல்வப் பொருளைக் காத்துக்கொண்டிருப்பானாயின், அ ஆ இழந்தான் என்று – ஐயோ அவன் அப்பொருளை இழந்தவனேயென்று, எண்ணப்படும் – கருதப்படுவான்.
The miser loses all!
He eats not, sheds no light of splendour around, performs no deeds that merit lofty praise, soothes no sorrow that choice friends feel, spends nought, but hoards his wealth in vain : “Aha! he’s lost it all,’ shall men pronounce.