நாலடியார் – 01:05 – செல்வம் நிலையாமை
என்னானும் ஒன்று தம் கையுற பெற்றக்கால்
பின் ஆவது என்று பிடித்து இரார் முன்னே
கொடுத்தார் உய போவர் கோடு இல் தீ கூற்றம்
தொடுத்து ஆறு செல்லும் சுரம்
நாலடியார் 5 – சொல் பொருள் விளக்கம்
பயன்படாத பொருளைப் பின்னர் பயன்படும் எனப் பிடித்து வைத்திலுக்கக் கூடாது. பயன்படுத்துவோருக்குக் கொடுத்து உதவ வேண்டும்.
என் ஆனும் ஒன்று – யாதாயினும் ஒரு பொருளை, தம் கை உற பெற்றக்கால் – தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின், பின் ஆவது என்று – மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று, பிடித்து இரா – இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல், முன்னே கொடுத்தார் – இளமையிலேயே அறஞ்செய்தவர், கோடு இல் தீக் கூற்றம் – நடுவுநிலைமையுள்ள அருளில்லாத கூற்றுவன், தொடுத்து செல்லும் சுரம் ஆறு – கயிற்றாற் கட்டிக் கொண்டுபோகின்ற காட்டு வழியை, உய்ய போவர் – தப்பிப் புண்ணிய உலகம் புகுவார்.
Give before death comes
When you have gained and hold in hand any single thing, retain it not with the thought, ‘This will serve some other day!’ Those who have given betimes shall escape the desert road along which death, an unyielding foe, drags his captives away.