நாலடியார் 04 : 03
அறன் வலியுறுத்தல்
வினைப் பயன் வந்தக்கால், வெய்ய உயிரா,
மனத்தின் அழியுமாம், பேதை; நினைத்து, அதனைத்
தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்து ஒருவுவார்.
நாலடியார் பாடல் 33 – சொல் பொருள் விளக்கம்
- முன்பு செய்த வினையின் பயன் வந்து தாக்கும்போது பெருமூச்சு விட்டுக்கொண்டு மனம் வருந்துபவன் பேதை.
- இது நான் செய்த பழவிளையின் பயன் என்று உணர்ந்துகொள்பவரே மனம் தடுமாறுவதிலிருந்து நீங்கி அமைதியுடன் வாழ்பவர் அறிவாளி.
பேதை – அறிவில்லாதவன், வினைப்பயன் வந்தக்கால் – முன் தீவினையின் பயனாக இடர்கள் இப்போது வந்து தாக்கினால், வெய்ய உயிரா – உடனே கடுமையாகப் பெருமூச்சு விட்டு, மனத்தின் அழியும் – மனத்தின் வருந்தி ஊக்கங் கெடும் ; நினைத்து அதனைத் தொல்லையது என்று உணர்வாரே – ஆராய்ந்து அவ்விடரைப் பழைய வினையினால் வந்ததென்று தெரிந்து அதற்கேற்ப ஒழுகுவோரே, தடுமாற்றத்து எல்லை இகந்து ஒருவுவார் – கலக்கத்தின் எல்லையைக் கடந்து அப்பால் நீங்குவர்.
The wise accept the sorrows of life as retributive
When the ‘fruit of deeds’ is come, the fool sighs
heavily, and all his soul dies out ; but those who
reflect and say, ,’Tis old desert,’ will pass beyond
the bound of life’s perplexity, and escape (by
devoting themselves to virtue)
ஐயா, ‘வினையால் வந்த கேடு என்று எண்ணுபவன் பேதை. அதை ஒரு தொல்லையாக கருதி அதனை எதிர்ப்போரே கலக்கம் அடையாமல் வாழ்வர்’ இப்படி அல்லவா பொருள் கொள்ள வேண்டும். இப்பாடல் வினைபயன் என்ற நம்பிக்கையை எதிர்ப்பது.