Skip to content

நாலடியார் – ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால்

நாலடியார் - ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால்

நாலடியார் 02:10இளமை நிலையாமை

ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால்

தோட்கோப்பு காலத்தால் கொண்டு உய்ம்மின் பீள் பிதுக்கி

பிள்ளையை தாய் அலற கோடலால் மற்று அதன்

கள்ளம் கடைப்பிடித்தல் நன்று

நாலடியார் 20 – சொல் பொருள் விளக்கம்

பிள்ளை அலறப் பிள்ளையையும் கூற்றம் கொண்டுசெல்லும். உனக்குத் தோள் கொடுப்பது நீ செய்யும் அறந்தான். இளங் கருவையும் அழிக்கும் கூற்றுவன் உண்மையால் இளமை நிலையாமை விளக்கமாதலின், இம்மை மறுமைக்குரிய புண்ணிய காரியங்களை இளமை யுடையோர் உடனே செய்துகொள்ள வேண்டும்.

ஆள் பார்த்து – தான் உயிர் பிரித்துக் கொண்டு போகும் ஆளைக் கருதி, உழலும் – அதே வேலையாகத் திரிகின்ற, அருள் இல் கூற்று – இரக்கம் இல்லாத கூற்றுவன், உண்மையால் – ஒருவன் இருக்கின்றானாதலால், தோள் கோப்பு – மறுமையாகிய வழிக்குக் கட்டுச் சோறு போல் உதவும் புண்ணியத்தை, காலத்தால் – இளமையாகிய தக்க காலத்திலேயே , கொண்டு உய்ம்மின் – உண்டாக்கிக் கொண்டு பிழையுங்கள், பீள் பிதுக்கி – முற்றாத இளங்கருவையும் வெளிப்படுத்தி, பிள்ளையை – குழந்தையை, தாய் அலறக் கோடலான் – தாய் அலறியழும் படி உயிர் கொள்ளுதலால், அதன் கள்ளம் – அக்கூற்றுவனது கடுமையை, கடைப்பிடித்தல் நன்று – நினைவில் இருத்திக் காரியங்கள் செய்தல் நல்லது.

The infant slain by death.


Relentless death is roaming round, and eyes his man! ‘Its true. Take up your wallet, scape betimes. He bears away the new-born babe, while the mother sorely laments. It is good to bear in mind his guile.

Naladiyar 20 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *