நாலடியார் 04 : 06
அறன் வலியுறுத்தல்
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
நாலடியார் பாடல் 36 – சொல் பொருள் விளக்கம்
கூற்றுவன் எந்த நேரத்திலும் வருவான் என்று கருதி உடனே நல்லன செய்யவேண்டும். இன்றோ, என்றோ என்று பார்த்துக்கொண்டு கூற்றம் பின்புறத்திலேயே காத்துக்கொண்டிருக்கிறது. எனவே பிறருக்குத் தீயனவற்றை விலக்கி நல்லனவற்றைச் செய்வோம்.
இன்றுகொல் அன்றுகொல் என்று கொல் என்னாது பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி – இன்றோ அன்றோ என்றோ என்று இகழ்ந்திராமல் பின்னாலேயே இருக்கின்றான் நமன் என்று மதித்து, ஒருவுமின் தீயவை – தீய செயல்களை நீக்குங்கள் ; ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம் – மாட்சிமைப்பட்ட நல்லோர் கூறும் அறச் செயல்களை இயன்ற வகையினால் தழுவிச் செய்யுங்கள் .
Death stands waiting behind you. Delay not!
‘This day ?’ * That day ? What day ? 0 question
not the time! Bethink you death stands behind you
ever waiting ! Put from you every evil thing ; and
with all your powers embrace the virtue which
sages teach
Good