நாலடியார் 04 : 08
அறன் வலியுறுத்தல்
உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் – கறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.
நாலடியார் பாடல் 38 – சொல் பொருள் விளக்கம்
மிகச் சிறிய ஓர் ஆலம் விதை முளைத்து வளர்ந்து மிகப் பெரிய நிழலைத் தரும்.அதுபோல,அறம் செய்தால், அது அறம் பெறத் தகுதி உடையவர் கைக்குப் போய்ச் சேருமாயின், அதனால் விளையும் பயன் வானம் சிறிது என்னும்படிப் பெரும் பயனைத் தரும்.
உறக்குதல் – சுருங்குதல் ; சிறிதாதல் . ஈண்டி – அடர்ந்து ; இங்குத் தழைத்து எனப்பட்டது. ‘பயந்து ஆங்கு’ எனப் பிரிக்க. அறத்தின் பயனைத் தரும் பொருள், ‘அறப்பயன் ‘ எனப்பட்டது. தக்கார் – ஞானவொழுக்கங்களால் உண்டாகும் தகுதியை உடையவர். தக்கார் கைப்பட்டக்கால் என்பதன் கருத்தைத் , தக்க இடத்தில் விதை முளைக்குமானால் என்று உவமத்துக்குங் கொள்க. புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும் என்றற்குப், ‘போர்த்து விடும்’ என்றார்.
A benefit conferred by the worthy
on the worthy
The banyan seed, though it be minute as one might
see in dreams, grows to a mighty tree of amplest
shade; so gifts from a virtuous hand, received by a worthy hand, though small, will hide the diminish’d
heavens.