நாலடியார் 03 : 10
யாக்கை நிலையாமை
கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் – வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
நாலடியார் 30 – சொல் பொருள் விளக்கம்
கூடு கட்டி வாழ்ந்த மரத்தை விட்டுவிட்டுப் பறவை பறந்து சென்றுவிடுவது போல, மக்கள் யாரையும் கேட்காமல் பிறப்பார்கள். தாய், தந்தை, அண்ணன், தம்பி என்றெல்லாம் உறவினராக இருப்பார்கள். ஒன்றுமில்லாமல் சும்மாவே போய்விடுவார்கள். சொல்லாமலே போய்விடுவதனால் இன்ன போது இறக்கும் நேரமென்பது தெரியாமையின், உடனே அறஞ்செய்து கொள்க.
வாளாது சேக்கை மரன் ஒழிய – சும்மா கூடு மரத்தில் கிடக்க, சேண் நீங்கு புள்போல – அதிலிருந்து தொலைவிலே பறந்து போய்விடும் பறவைகள் போல – மாந்தர்கள் – மக்கள், கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி – ஒருவரையும் கேளாமலே வந்து சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து – பின்பு தம் உடம்பை உறவினரிடம் கிடக்கும்படி நீக்கி விட்டு, வாளாதே போவர் – பேசாமலே இறந்து போய் விடுவார்கள்.
All human relationships merely temporary.
Unasked men come, appear in the home as kinsmen, and then silently go. As the bird silently deserts the tree where its nest yet remains, and goes far off, so these leave but their body to their friends.