நாலடியார் – 01:02 – செல்வம் நிலையாமை
துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க
அகடு உற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்
நாலடியார் 2 – சொல் பொருள் விளக்கம்
செல்வம் வண்டிச்சக்கரம் போல உருளும். எனவே எருது பூட்டி ஏர் உழுது பெற்ற செல்வத்தைப் பலரோடு கூடி உண்டு மகிழ்க.
துகள்தீர் பெரு செல்வம் – குற்றமற்ற சிறந்த செல்வம், தோன்றியக்கால் – உண்டானால், தொட்டு – அது தொடங்கி, பகடு நடந்த கூழ் – ஏர் நடந்ததனால் உண்டான உணவை, பல்லாரோடு உண்க – விருந்தினர் முதலிய பலரோடுங் கூடி உண்ணுக, ஏனென்றால் ; செல்வம் – பொருள், அகடு உற யார்மாட்டும் நில்லாது – உறுதி பொருந்த யாரிடத்திலும் நிலைத்திராமல் , சகடக்கால் போலவரும் – வண்டியுருளைபோல மாறிப் புரளும்.
Wealth abides not, share it and enjoy
When you own ample wealth acquired by blameless means, with many sharing eat the grain that steers have trodden out! In centre poised prosperity stands with no man, but revolves like the waggon’s wheel.