நாலடியார் 03 : 03
யாக்கை நிலையாமை
மன்றம் கறங்க மணப்பாறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை
ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.
நாலடியார் 23 – சொல் பொருள் விளக்கம்
மணப்பறையே ஒருவருக்குப் பிணப்பறை ஆதல் கூடும் என்று மாண்டார்(மாட்சிமை உள்ளவர்) மனம் வலிமையாகப் பற்றிநிற்கும். மணப்பறையே பிணப்பறையாகவும் மாறுமாதலின், யாக்கையின் நிலையின்மை கருதி உடனே அறஞ்செய்க.
மன்றம் கறங்க – பேரவை முழுதும் ஒலிக்கும்படி, மணப்பறையாயின – திருமண மேளமாய் முழங்கியவை, அன்று அவர்க்கு ஆங்கே – திருமண நாளன்று திருமண மக்களுக்கு அத்திருமணக் கூடத்திலேயே, பிணப்பறையாய் பின்றை ஒலித்தலும் உண்டாம் என்று – சாவுமேளமாய்ப் பின்பு ஒலித்தலும் நேருமெனக் கருதி, உய்ந்து போம் ஆறே – நன்னிலையுற்றுச் செல்லுவதற்கான அறவழியிலேயே, வலிக்குமாம் மாண்டார் மனம் – அறிவு மாட்சிமைப்பட்டோரது நன்மனம் துணிந்து நிற்கும் என்ப.
Mute earthly joys
The marriage drums that sounded out in the festive hall, there and that very day have served for him as funeral drums! Men of lofty minds will note that thus it haps, and will strive to gain the way to escape.