நாலடியார் 04 : 10
அறன் வலியுறுத்தல்
மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.
நாலடியார் பாடல் 40 – சொல் பொருள் விளக்கம்
உடையோடு உண்கலத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, கையேந்தி இரந்துண்ணும் ஈன வாழ்க்கை நடத்துகிறேன். அப்படி ஊட்டியும் இந்த உடம்பு நிலைத்திருக்கவில்லையே! இந்த உடம்பானது எனக்கு நீட்டித்துக்கொண்டே இருக்குமாயின்,மானமுடைமை என்னும் அரிய அணிகலனை நீக்கிவிட்டுபிச்சை எடுக்கும் ஈன வாழ்க்கையும் வாழ்வேன்.அப்படி ஈனப் பிழைப்புப் பிழைத்தாலும் இந்த உடம்பு நீடித்து இருப்பதில்லையே.பின் எதற்காக ஈனப் பிழைப்புப் பிழைக்க வேண்டும்?அறம் செய்து நற்பேறு பெறலாமே.
ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் – இழி தொழில்களால் உண்பித்த இடத்தேனும், உறுதி சேர்ந்து இவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின் – உறுதி பொருந்தி இந்த உடம்பு காலம் நீண்டு நிலைபெறுமென்றால், மான அருங்கலம் நீக்கி – மானமாகிய பெறற்கரிய அணிகலனை விடுத்து, இரவு என்னும் ஈன இளிவினால் வாழ்வேன் மன் – இரத்தல் என்னும் ஏளமான இழிதொழிலினால் உயிர் வாழ்வேன் ; ஆனால் அவ்வுடம்புதான் நிலைக்கப்போவதில்லையே.
Why should man maintain the perishable
body by dishonourable begging ?
Parting with honour’s jewel I might still consent to
live a suppliant’s life erf shame, if when maintained
by such disgrace, this body could abide in strength
and last for length of days.