Tamil Online Dictionary
சொலல்வல்லன்‘s tamil online dictionary is the world’s best online tamil dictionary. 10000+ words collection with detailed description of the words, makes it one of the largest such collection in the world. We constantly add more new words to our tamil dictionary Words Collection.
சொலல்வல்லன்க்கு வருக! இது சொற்களின் பொருள், மூலம், பலுக்கல் அடங்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் முயற்சி. இங்கு எல்லா மொழிச் சொற்களுக்குமான பொருள்களும் விளக்கங்களும் தமிழில் வழங்குகிறோம்.
சொலல்வல்லன் அகராதி அல்லது அகரமுதலி என்பது சொற்களின் பட்டியல் ஆகும். குறித்த சொற்களின் வரைவிலக்கணங்கள் அல்லது குறித்த சொற்களுக்கு இணையான பிற மொழிச் சொற்களைக் கொண்டதாக அகராதிகள் அமையும்
சங்க இலக்கிய அகராதி (Tamil Online Dictionary for Sangam Literatures)
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களில் காணப்படும் அரிய சொற்களை, அவற்றுக்கான தமிழ், ஆங்கிலப் பொருள்களுடன், அச்சொற்கள் அப் பாடல்களில் பயின்று வருகின்ற இடங்களில் சிலவற்றையும் கொடுத்து, விளக்க முற்படும் பகுதி இது.
வழக்கு சொல் அகராதி(Tamil Online Dictionary for Regional Words)
இளங்குமரன் ஐயா அவர்களின் வழக்குச் சொல் அகராதி
இணைச்சொல் அகராதி(Tamil Online Dictionary for Pair Words)
இளங்குமரன் ஐயா அவர்களின் இணைச்சொல் அகராதி
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா – பாரதியார்
எந்த ஒரு சொல்லுமே ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமேயன்றி, அழிவுப்பாதைக்கு அழைப்பதாக இருக்கக்கூடாது.
எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, சிரத்தை, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும்.
ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
தமிழ்ச் சொற்கள் பற்றிய தெளிவு தனிமனித விழிப்புணர்வுக்கும் தனிமனித வளர்ச்சிக்கும் தூண்டுதலாக அமையும்.
தமிழ்ச் சொற்கள் அல்லது இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.
சொல்வன்மை
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.