பயம் என்னும் உணர்ச்சி நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒருவரை மரணத்தை நோக்கி தள்ளும் மிகப்பெரிய ஆயுதம்..” அமெரிக்காவின் மரபணு ஆய்வாளர் புரூஸ் லிப்டன்
ஒருவருக்கு பயம் ஏற்பட்டால் அதன் மன ரீதியான பாதிப்பு எத்தனை அலகுகள்(Units) என்று சொல்ல முடியவில்லை. இதே போன்றே மகிழ்ச்சி, கோபம், கவலை, துக்கம் இவற்றால் ஏற்படும் மனநிலை மாற்றங்களை அளக்கத் தெரியாத காரணத்தால் மன நிலை மாற்றங்களை மருத்துவத்தில் இருந்து அகற்றி விட்டார்கள்.
உடல் மாற்றங்களையும், வேதியியல் மாற்றங்களையும் அளவிட முடியும். அவற்றை அறிவியல் ரீதியாக நிரூபிக்க அளவுகள், கருவிகள் உள்ளன. ஆனால் மனநிலை மாற்றத்தை எப்படி அளப்பதென்று இன்றளவும் அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.
அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.
அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.
அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.
பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.