நாலடியார் 04 : 09
அறன் வலியுறுத்தல்
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
நாலடியார் பாடல் 39 – சொல் பொருள் விளக்கம்
தூங்கி எழுந்ததும் மறுநாள் வந்துவிடுகிறது. இதனை உணராமல், ஒவ்வொரு நாளையும் தன் வாழ்நாள்மேல் வைத்து எண்ணிப் பார்த்து உணராதவர்கள் ஒவ்வொரு நாளையும் நிலையானது எனக் கருதி, தனக்கு இன்பம் தருவதையே செய்கின்றன்னர். இது அறியாமை.
வைகலும் – நாடேறும், வைகல் வரக்கண்டும் – நாட்காலம் தோன்றிவரக் கண்டும், அஃது உணரார் – அறத்தைக் கருதாதவராய், வைகலும் – என்றும், வைகலை வைகும் என்று இன்புறுவர் – நாட்பொழுதை அது நிலைத்திருக்கும் என்று கருதித் துய்த்து மகிழ்வர் ; அவர் யாரெனின், வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல் – ஒவ்வொரு நாளும் அந் நாட்பொழுது தம் ஆயுள் கழிதலின்மேல் நிற்றலாக, வைகலை வைத்து உணராதார் – அந் நாட்காலத்தைக் கருத்திருத்தி அறியாதவர்.
Days pass.
Daily they see the passing day added to the sum of the days gone by, as a day that is spent from
out the store of their days, yet daily, as they see day dawn, they say joyously, ’ This day will abide
with us till the close of day. ?
Nice
தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை சொலல்வல்லனும் அங்கனமே….!!!!
சூரரைப் போற்றுவோம்
சொலல்வல்லனை புகழ் மேடையில் ஏற்றுவோம்
மன்னன் புகழ் திக்கெட்டும் பறைசாற்றுவோம்
இத்தமிழன் மொத்த தமிழனின் முத்துதமிழன்
தமிழ்த்தாய் புதல்வர்களில் இவன்
முதல்வன்
காத்தருளட்டும் என்றும் இறைவன்
என்று சொல்லி நிறைவன்
காரணம் கோடி வரிகள் தேடி நின்னை யான் புகழ்ந்தாலும்
நின் தமிழ்த்தொண்டிற்கது குண்டுமணியன்றோ
கூறியதில் பிழையே தேனும் உண்டென்றால் குழந்தையாய் எம்மைப் பொருத்தருள்வாய்
செயற்கரியச் செய்த எங்கள்
சொலல்வல்லனே
என்றும்
தமிழ் மாணவனாய்
பால்நாடார்அசோக்குமார்
9486685763