நாலடியார் - 02:05 - இளமை நிலையாமை
எனக்கு தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு
தனக்கு தாய் நாடியே சென்றாள் தனக்கு தாய்
ஆகியவளும் அதுஆனால் தாய் தாய்க்கொண்டு
ஏகும் அளித்து இ உலகு
நாலடியார் 15 – சொல் பொருள் விளக்கம்
இன்று இளையராயிருப்பவர் நாளை மூத்து இறந்துபோதலே இயல்பாதலால், இளமை நிலையாதென்பது திண்ணம். என் தாய் தன் தாயிடம் சென்றுவிட்டாள். என் மகளும் இதைத்தான் காண்பாள். தலைமுறை தலைமுறையாக இறப்பும் பிறப்பும் தொடர்ந்து வருகின்றன
எனக்குத் தாய் ஆகியாள் – எனக்குத் தாயாயிருந்தவள், என்னை ஈங்கு இட்டு – என்னை இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, தனக்குத் தாய் நாடி – தனக்குத் தாய் விரும்பி, சென்றாள் – இறந்துபோனாள் ; தனக்குத் தாய் ஆகியவளும் – அப்படிப் போன அவளுக்குத் தாயாக நேர்ந்தவளும், அது ஆனால் – அவ்வாறே போனால், தாய் தாய்க்கொண்டு – ஒரு தாய் தனக்குத் தாயைத் தாவிக்கொண்டு , ஏகும் அளித்து இவ்வுலகு – போகின்ற எளிமையையுடையது இந்த உலகம் என்க.
Endless series of successive generations
My mother bare me, left me here, and went to seek her mother, who in the selfsame manner has gone in search; and thus in ceaseless round goes on the mother-quest. Such is the grace this world affords !