நாலடியார் 04 : 05
அறன் வலியுறுத்தல்
கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் ;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.
நாலடியார் பாடல் 35 – சொல் பொருள் விளக்கம்
வெல்லக்கட்டிக்குக் கரும்புச் சாற்றைக் காய்ச்சும்போது வரும் துரும்பை அரித்து எடுத்து எறிந்துவிடுவர். அதுபோல,இளமைப் பருவத்திலேயே உடம்பை பயன்படுத்தி பின்னர் பயன்படக்கூடிய நல்வினைகளைச் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தொகொண்டவர் சாவு வரும்போது வருந்தமாட்டார்.
சிறு காலை – மிக்க காலைநேரத்தில், கரும்பு ஆட்டி – கரும்பை ஆலையில் ஆட்டி, கட்டி கொண்டார் – சருக்கரைக் கட்டியைச் செய்துகொண்டவர், துரும்பு எழுந்து – அக் கரும்பு பின் துரும்பாகித் தோன்றி, வேம் கால் – தீயில் வேகும்போது, துயர் ஆண்டு உழவார் – அது கண்டவிடத்தில் துன்பத்தினால் வருந்தார், அதுபோல் வருந்தி உடம்பின் பயன் கொண்டார் – நற்செயல்களில் உழைத்து உடம்பாலான அறப்பயனைப் பெற்றவர், கூற்றம் வருங்கால் – நமன் வருகின்ற காலத்தில், பரிவது இலர் – தம் உடம்பின் கேடு குறித்து இரங்குதல் இலராவர்.
The body is only sapless stalks
Those who have pressed the sugar-cane, and early
taken the juice, when the refuse heaped up burns,
will suffer no grief: ^ose who have toiled and
gained the fruit won from embodied existence will
feel no pangs when death shall come.