நாலடியார் – 02:01 – இளமை நிலையாமை
நரை வரும் என்று எண்ணி நல் அறிவாளர்
குழவியிடத்தே துறந்தார் புரை தீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப்பார்
நாலடியார் 11 – சொல் பொருள் விளக்கம்
இளமையில் ஒழுக்கமுடன் வாழ்க. முதுமை வருவது உறுதி!இளமைப் பருவத்தை அறவழியிற் பயன் படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள், பின்பு மூப்பினால் வருந்துவார்கள்.
‘நரை’ மூப்புப் பருவமும், ‘குழவி’ இளமைப் பருவமும் உணர்த்துங் குறிப்பில் வந்தன. துறத்தல் – பற்றுள்ளம் விடுதல். ‘புரை தீரா’ ‘மன்னா’ இரண்டும் இளமைக்கு அடைமொழிகள். மகிழ்தல் – இங்கு நுகர்தல ; இளமையை அறஞ்செய்தற்குக் கருவியாகக் கொள்ளாமல் , அதனையே துய்க்கும் பொருளாகக்கொண்டு இன்புறுதல் பிழை என்றபடி. நல்லறிவாளர் துறந்தார் எனவே, இளமை மகிழ்ந்தார் புல்லறிவாளர் என்பது பெறப்படும் . ‘பட்டாங்கு’ என்பதுபோல, ‘இன்னாங்கு’ என்பதும் ஒரு சொல். பற்றுள்ளம் விட்டு எம்முயற்சியையும் இளமையிலேயே செய்க என்பது பொருள். அங்ஙனம் செய்தார்க்கு, மூப்பும் வராது ; வரினும் இன்னல் செய்யாது என்பது உணர்த்தப்பட்டது.
Age will come. Be wise early
“Grey eld will come,’—the wise remembering this renounce the world even in tender age; but they who joy in youth, unstable, never free from fault, shall erewhile painfully rise up leaning on a staff.