நாலடியார் – 01:03 – செல்வம் நிலையாமை
யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ்
சேனை தலைவராய் சென்றோரும் ஏனை
வினை உலப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள
நாலடியார் 3 – சொல் பொருள் விளக்கம்
மனைவிச் செல்வம் கூட மாற்றார் கொள்ள நேரலாம். மன்னரும் தன் நிலை குலைந்து மாய்வர்
யானை எருத்தம் பொலிய – யானையின் கழுத்து விளங்கும்படி, குடை நிழல் கீழ் – குடை நிழலில சேனைத் தலைவராய் – பல சேனைகட்குத் தலைவராக, சென்றோரும் – ஆரவாரமாய் உலாச்சென்ற அரசர்களும், ஏனைவினை உலப்ப – மற்றத் தீவினை கெடுக்க அதனால், தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள – தாம் திருமணஞ் செய்துகொண்ட மனைவியையும் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி, வேறு ஆகி வீழ்வர் – முன் நிலைக்கு வேறான வறுமையாளராகி நிலைகுலைவர்.
Mighty warriors fall
Those who rode resplendent forth on the neck of an elephant, beneath the state umbrella’s shade, as the leaders of the host, when ‘other deeds’ destroy, shallchange and fall, while foes lead away their wives as captives.