நாலடியார் – 02:08 – இளமை நிலையாமை
பருவம் எனைத்து உள பல்லின் பால் ஏனை
இரு சிகையும் உண்டீரோ என்று வரிசையால்
உள் நாட்டம் கொள்ளப்படுதலால் யாக்கை கோள்
எண்ணார் அறிவுடையார்
நாலடியார் 18 – சொல் பொருள் விளக்கம்
பல்லால் உண்ணும் பருவம் எங்கே போயிற்று?இளமை கழிதலை யாரும் தமக்குள் உணர்தலின், அறிவுடையோர் அந் நிலையா இளமையை ஒரு பொருளாக மதித்து மகிழார்.
பருவம் எனைத்து உள – வயது எவ்வளவு ஆகியிருக்கின்றன. பல்லின்பால் ஏனை – பல்லின் தன்மை எப்படியிருக்கின்றன, இரு சிகையும் உண்டீரோ – இரண்டு பிடியேனும் உண்கின்றீர்களா, என்று வரிசையால் – என்று ஒன்றன்பின் ஒன்றாக, உள் நாட்டம் கொள்ளப்படுதலால் – இங்ஙனம் பிறரைப்பற்றித் தமக்குள் ஆராயும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதனால், யாக்கைக் கோள் – உடம்பின் இளமையை, எண்ணார் அறிவுடையார் – அறிவுடையோர் ஒரு பொருளாகக் கருதமாட்டார்கள்.
The wise will learn to judge the body as a thing of nought.
’How old are you ?’ ‘How last your teeth ?’ and, ‘Do you eat two courses yet?’ men ask with kindly courtesy. By such close questions urged, the wise will learn to judge the body as a thing of nought.