நாலடியார் 04 : 07
அறன் வலியுறுத்தல்
மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் – தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
நாலடியார் பாடல் 37 – சொல் பொருள் விளக்கம்
பிறரால் பெறும் பயன் அதிகம். எனவே ஒத்துதவி வாழும் ஒப்புரவை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். மறுமைப் பயனும் அதுவே. கருவியாக வந்த உடம்புக்கே காரியங்கள் செய்து கொண்டிராமல், உயிருக்கான காரியங்களையே மிகவும் செய்து கொள்ளல் வேண்டும்.
மக்களால் ஆய பெரும்பயனும் – மக்கட் பிறவியினால் செய்யதக்க பெரும்பயனான நற்செயல்களும், ஆயுங்கால் – எண்ணிப் பார்க்கும்போது, எத்துணையும் ஆற்றப் பல ஆனால் – எவ்வளவும் மிகப் பலவாகு£தலால், தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது – பல கருவிகளோடு கூடிய இவ்வுடம்புக்கே உதவிகள் செய்து கொண்டிராமல், உம்பர்க் கிடந்து உண்ணப் பண்ணப்படும் – மேலுலகத்தில் எளிதாக இருந்துகொண்டு இன்பம் நுகரும் பொருட்டு உயிருக்கான அறவினைகளே மிகவும் செய்து கொள்ளப்படுதல் வேண்டும்.
Use the body to gain the world to come.
When you examine closely the mighty gains to be
acquired by birth in a human shape, if they seem
manifold, perform not deeds which suit the body’s
frame alone, but deeds whose fruit is joy in the
world to come!