Skip to content

நாலடியார் – இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ

நாலடியார் - இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை ஆற்றபெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைதழீஇம் தழீஇம் தண்ணம் படும்

நாலடியார் – 01:06 – செல்வம் நிலையாமை

இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ

கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை ஆற்ற

பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை

தழீஇம் தழீஇம் தண்ணம் படும்

நாலடியார் 6 – சொல் பொருள் விளக்கம்

இறத்தல் திண்ணம். அறத்தை புரிக! இறவாமல் வாழ்ந்தவர் யாரும் இல்லை. எனவே இருக்கும் பொருளைப் பயன்படுமாறு செய்யவேண்டும்.

இழைத்த நாள் எல்லை இகவா – உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாள்கள் தம் அளவைக் கடவா ; பிழைத்து ஒரீஇ – அந்த அளவில் தவறி நீங்கி ; கூற்றம் குதித்து உய்ந்தார் – கூற்றுவனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர்பிழைத்திருப்பவர் ; ஈங்கு இல்லை – இவ்வுலகத்தில் இல்லை ; நாளை – நாளையொருகால், தண்ணம் தழீஇம் தழீஇம் படும் – சாவுப்றை தழீஇம் தழீஇம் என்று ஒலிக்கும் ; ஆதலால், பெரும் பொருள் ஆற்ற வைத்தீர் – பெருமையைத் தருவதாகிய பொருளை மிகுதியாக வைத்துள்ள செல்வர்களே ! வழங்குமின் – உடனே அப்பொருளைப் பிறர்க்கு உதவுங்கள்.

Death inevitable. Hoard not !

Man’s days pass not their assigned bound. None here on earth have ever escaped death’s power, made off and got free. O hoarder of ample wealth, dispense it! On the morn the funeral drum will sound.

Naladiyar 6 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *