Skip to content

நாலடியார் – சொல் தளர்ந்து கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய்

நாலடியார் - சொல் தளர்ந்து கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் பல் கழன்று பண்டம் பழிகாறும் இற்செறிந்துகாம நெறி படரும் கண்ணினார்க்கு இல்லையேஏம நெறி படரும் ஆறு
நாலடியார் - 02:03 - இளமை நிலையாமை

சொல் தளர்ந்து கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய்

பல் கழன்று பண்டம் பழிகாறும் இற்செறிந்து

காம நெறி படரும் கண்ணினார்க்கு இல்லையே

ஏம நெறி படரும் ஆறு

நாலடியார் 13 – சொல் பொருள் விளக்கம்

வாழ்நாளளவுங் காம நோக்கமுடையவர் பேரின்ப நெறி செல்லுதல் இல்லை.

சொல் தளர்ந்து – பேச்சின் வலி குறைந்து, கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் – கையிற் கோல் ஊன்றித் தள்ளாடிய நடையை உடையவராய், பல் கழன்று – பற்கள் உதிர்ந்து, பண்டம் பழிகாறும் – இவ்வுடம்பாகிய பண்டம் பழிக்கப்படுமளவும், இல் செறிந்து காமநெறி படரும் கண்ணினார்க்கு – மனைவியோடு பற்றுக் கொண்டிருந்து காமவழியிற் செல்லும் சிற்றறிவுடையாருக்கு, ஏமம் நெறி படரும் ஆறு – மெய்யின்ப நெறியில் செல்லும் வகை, இல்லையே – உண்டாவதில்லை.

Men are loath to give up bodily pleasures

Speech falters, they lean on a staff, and walk tottering, their teeth fall out; yet, till the vessel (the body) is scorned by all, they linger in the house, still indulging fond desires; to these no way of safety opens out.

Naladiyar 13 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *