நாலடியார் – தாழா தளரா தலை நடுங்கா தண்டு ஊன்றா

நாலடியார் - தாழா தளரா தலை நடுங்கா தண்டு ஊன்றா

நாலடியார் – 02:04 – இளமை நிலையாமை

தாழா தளரா தலை நடுங்கா தண்டு ஊன்றா

வீழா விறக்கும் இவள்மாட்டும் காழ் இலா

மம்மர் கொள் மாந்தர்க்கு அணங்கு ஆகும் தன் கை கோல்

அம்மனை கோல் ஆகிய ஞான்று

நாலடியார் 14 – சொல் பொருள் விளக்கம்

அவள் முதுமையில் ஊன்றும் கோல் அவனுக்கு ஊன்றுகோல் ஆகுமா?முன்பு, கண்டோரைப் பிணிக்கும் அழகுருவோடு திகழ்ந்த மகளிர் பின்பு உடம்பு கூனித் தலைநடுங்குகின்ற இரங்கத்தக்க மூப்பு நிலையை அடையக் காண்டலின் இளமையை ஒரு பொருட்டாக எண்ணிக் காமத்தில் ஆழ்ந்து அதனால் அறச்செயல்களைக் கைநழுவ விடுதலாகாது.

தாழா – முதுகு தாழ்ந்து , தளரா – உடம்பின் கட்டுத் தளர்ந்து, தலை நடுங்கா – தலை நடுங்கி, தண்டு ஊன்றா – கையில் தடி ஊன்றி, வீழா – விழுந்து, இறக்கும் – இறக்கப்போகும் மூப்பு நிலையிலுள்ள, இவள் மாட்டும் – இத்தகைய ஒருத்தியிடத்தும், காழ் இலா – உறுதியான அறிவில்லாத, மம்மர்கொள் மாந்தர்க்கு – காம மயக்கத்தைக் கொள்ளுகின்ற மக்களுக்கு, தன் கைக்கோல் – அவள் இப்போது பிடித்திருக்கும் கையின் ஊன்றுகோல், அம்மனைக்கோல் ஆகிய ஞான்று – அவள் தாயின் கைக் கோலாயிருந்த காலத்தில், அணங்கு ஆகும் – வருத்துகின்ற காமத் தன்மையையுடைய அழகுருவம் இருந்திருக்கும்.

weak desire

To men that cherish weak desire for her that’s doomed to droop and fail, supporting her palsied limbs with a staff, and then to fall and pass away, what anguish comes, when she grasps in her hands the staff her mother held!

Naladiyar 14 – English Translation

Leave a Reply

Your email address will not be published.