Skip to content

நாலடியார் – மற்று அறிவாம் நல் வினை யாம் இளையம் என்னாது

நாலடியார் - மற்று அறிவாம் நல் வினை யாம் இளையம் என்னாது

நாலடியார் – 02:09 – இளமை நிலையாமை

மற்று அறிவாம் நல் வினை யாம் இளையம் என்னாது

கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்மின்

முற்றி இருந்த கனி ஒழிய தீ வளியால்

நல் காய் உதிர்தலும் உண்டு

நாலடியார் 19 – சொல் பொருள் விளக்கம்

கனி மட்டும் அன்று. காயும் உதிரும். எனவே யாம் இளையம், முதுமையில் அறம் செய்யலாம் எனக் காத்திருக்கலாகாது. மூத்தோரே யல்லாமல் இளையோரும் திடுமென இறந்துபோதல் உண்டாகலின், கையிற் பொருள் உண்டான இளமைக் காலத்திலேயே அதனை அறஞ்செய்து பயன் கொள்ளவேண்டும்.

மற்று அறிவாம் நல்வினை – நற்செயல்களைப் பின்னால் தெரிந்து செய்து கொள்ளலாம், யாம் இளையம் – இப்போது யாம் இளமைப் பருவமுடையேம், என்னாது – என்று கருதாமல், கைத்து உண்டாம் போழ்தே – கையில் பொருள் உண்டானபொழுதே. கரவாது அறம் செய்ம்மின் – ஒளியாமல் அறஞ் செய்யுங்கள் ; ஏனென்றால், முற்றியிருந்த கனி ஒழிய – பழுத்திருந்த பழங்களேயல்லாமல், தீ வளியால் – கோடைக் காற்றினால், நல் காய் உதிர்தலும் உண்டு – வலிய காய்களும் மரங்களிலிருந்து விடுதலுண்டு.

When evil tempests rage, not the ripe fruit alone, but the unripe fruit’s fair promise also falls

Say not, ‘in after time we’ll learn virtue, we’re young;’ but while wealth is yours conceal it not; do virtuous deeds. When evil tempests rage, not the ripe fruit alone, but the unripe fruit’s fair promise also falls.

Naladiyar 19 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *