நாலடியார் – வெறி அயர் வெம் களத்து வேல்மகன் பாணி

நாலடியார் - வெறி அயர் வெம் களத்து வேல்மகன் பாணி முறி ஆர் நறும் கண்ணி முன்னர் தயங்க மறி குளகு உண்டு அன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடையாளர்கண் இல்

நாலடியார் – 02:06 – இளமை நிலையாமை

வெறி அயர் வெம் களத்து வேல்மகன் பாணி

முறி ஆர் நறும் கண்ணி முன்னர் தயங்க

மறி குளகு உண்டு அன்ன மன்னா மகிழ்ச்சி

அறிவுடையாளர்கண் இல்

நாலடியார் 16 – சொல் பொருள் விளக்கம்

பலியிடும் ஆடு இலையுண்டு மகிழ்வது போன்றது வாழ்வு. வெறியாடும் வேலன் உடுத்தியிருக்கும் தழையை அவன் பலியிடப்போகும் ஆட்டுக்குட்டி மேய்ந்து இன்புறுவது போன்றதுதான் இளமையில் துய்க்கும் இன்பம். அறிவுடையவர்கள், இளமை யெழுச்சிகளை அறவினைகட்கு ஊறு செய்வனவாகக் கருதி அஞ்சுவரே யல்லால் அவற்றை நுகர்ந்து களியார்.

வெறி அயர் வெம் களத்து – வெறியாடு தலைச் செய்கின்ற கொடிய பலிக்களத்தில், வேல்மகன் பாணி – வெறியாடுவோனுடைய கைகளிற் கட்டியுள்ள, முறி ஆர் நறு கண்ணி – தளிர்கள் இடையிடையே பொருந்திய மணமமைந்த மலர்மாலை, முன்னர் தயங்க – தன்னெதிரில் விளங்கா நிற்க, மறி – அதைக் கண்ட பலி ஆடு, குளகு உண்டு அன்ன – அதிலுள்ள தளிரைத் தனக்கு உணவாக உண்டு மகிழ்ந்தாற் போன்ற. மன்னா மகிழ்ச்சி – இளமையால் வரும் நிலையா மகிழ்ச்சி, அறிவுடையாளர்கண் இல் -அறிவுடையாரிடத்தில் இல்லை.

The lamb before the sacrificer

The lamb in the ruddy slaughter-house will crop the fragrant shoots that dangle from the garland in the slayer’s hand; such transient gladness of the thoughtless, youthful hour is never found amid the wise.

Naladiyar 16 – English Translation

Leave a Reply

Your email address will not be published.