Skip to content

நாலடியார் – அகத்து ஆரே வாழ்வார் என்று

நாலடியார் -அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப் புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத் தவத்தால் தவஞ்செய்யா தார்

நாலடியார் 04 : 01

அறன் வலியுறுத்தல்

அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கி

புக தாம் பெறாஅர் புறங்கடை பற்றி

மிக தாம் வருந்தி இருப்பரே மேலை

தவத்தால் தவம் செய்யாதார்

நாலடியார் பாடல் 31 – சொல் பொருள் விளக்கம்

தன் உள்ளத்தை உற்று நோக்குவதே தவம். இப் பிறப்பில் அறஞ்செய்யாதவர் வருபிறப்பில் இரந்து நிற்பர்.

மேலைத் தவத்தால் – முன் பிறப்பில் செய்த தவத்தின் பயனான செல்வ நிலைமையால், தவம் செய்யாதார் – மறுபிறப்பிற்கு வேண்டுந் தவத்தைச் செய்யாமல் இறந்து பிறந்தவர், அம் மறுபிறப்பில் ; அகத்து ஆரே வாழ்வார் – இம்மாளிகையில் வாழ்வார் எத்தகையவரோ, என்று எண்ணி அண்ணாந்து நோக்கி – என்று மதிப்பாகக் கருதித் தலை நிமிர்ந்து மாளிகையின் மேனிகையைப் பார்த்து, தாம் புகப்பெறார் – தாமாக உள்நுழையப் பெறாராய், புறங்கடை பற்றி – தலைவாயிலைப் பிடித்துக் கொண்டு, தாம் மிக வருந்தி இருப்பார் – தாம் மிகவும் வாடி ஒரு பயனுமின்றி நின்றுகொண்டிருப்பர்.

The Might of Virtue

‘Yet those within are blest,’ so saying, they look
up, but obtain no entrance : their place is at the
outer gate. There will they suffer much, who thro*
lack of former penitence do no penance now. [In
a former state penance won for them a human
shape. As men they have now failed

Naladiyar 31 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *