Skip to content

நாலடியார் – ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ

ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள் சென்றன செய்வது உரை

நாலடியார் 04 : 02

அறன் வலியுறுத்தல்

ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து

போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது

நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள்

சென்றன செய்வது உரை

நாலடியார் பாடல் 32 – சொல் பொருள் விளக்கம்

அறத்தை மறந்து, ஆக்கத்தையே நாடும் நெஞ்சே! ஓயாத துன்பத்தில்தானே நீ உழன்றாய். வேறு என்ன செய்தாய்? நாம் பலர் முன்னிலையில் மதிக்கத் தக்க ஆளாக வேண்டும் என்னும் ஆசையால் அறத்தை மறந்துபோவோம் என்று எண்ணிப் பார்க்காத புலை-நெஞ்சே!இடை விடாமல் நிலையாக உழைத்துக்கொண்டே இருக்கிறாய்.இதனால் உன் வாழ்நாளில் நீ கண்ட பலன் என்ன?  

ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து – அறத்தை மறந்து பொருளை விரும்பி முயன்று நாம் மேலும்மேலும் பெருஞ் செல்வராவோம் ; போவாம் நாம் – நாம் இவ்வளவு விரைவில் இறந்துபோக மாட்டோம் ; என்னா – என்று எண்ணி, புலைநெஞ்சே – தாழ்ந்த தன்மையையுடைய நெஞ்சமே, ஓவாது நின்று உஞற்றி வாழ்தி எனினும் – இடைவிடாமல் தொழிலில் நிலையாயிருந்து முயன்று நீ நினைத்தபடியே வாழ்கின்றா யென்றாலும், நின் வாழ்நாட்கள் சென்றன – நின் ஆயுள் நாட்கள் இதோ கழிந்துவிட்டன, செய்வது உரை – மறுமைக்காக இனி என்ன செய்குவை சொல்.

What wilt thou do in the end thereof?

Say not, 0 silly soul, we will live desiring wealth
and die forgetting virtue ! We’ll say that ceaselessly
toiling thou shalt live long ; but tell me, what wilt
thou do when all thy happy days are over?

Naladiyar 32 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *