Skip to content

நாலடியார் – உடாஅதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றும்

நாலடியார் - உடாஅதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றும் கெடாஅத நல் அறமும் செய்யார் கொடாஅதுவைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாடஉய்த்து ஈட்டும் தேனீ கரி

நாலடியார் – 01:10 – செல்வம் நிலையாமை

உடாஅதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றும்

கெடாஅத நல் அறமும் செய்யார் கொடாஅது

வைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாட

உய்த்து ஈட்டும் தேனீ கரி

நாலடியார் 10 – சொல் பொருள் விளக்கம்

ஒன்றும் ஈயாதவன் தேனீயைப் போல் எல்லாம் இழப்பான்! தேன் ஈ உண்ணாமல் கூட்டில் சேர்த்த தேன் போலப் பயன்படுத்தாத செல்வம் பிறர் கைக்கு மாறும்.

வான் தோய் – வானத்தைப் பொருந்துகின்ற, மலைநாட – மலைநாட்டுத் தலைவனே ! உடாதும் – நல்ல ஆடைகள் உடுக்காமலும், உண்ணாதும் – உணவுகள் உண்ணாமலும், தம் உடம்பு செற்றும் – தம் உடம்பை வருத்தியும் ; கெடாத நல் அறமும் செய்யார் – அழியாத சிறந்த புண்ணியமுஞ் செய்யாமலும், கொடாது – வறிய வர்க்குக் கொடாமலும், ஈட்டி வைத்தார் – பொருளைத் தொகுத்து வைத்தவர்கள், இழப்பர் – அதனை இழந்து விடுவர், உய்த்து ஈட்டும் தேன் ஈ- பல பூக்களிலிருந்து கொண்டுபோய்த் தொகுத்து வைக்கும் தேனீக்கள், கரி – அதற்குச் சான்று.

The miser like the honey-bee loses all

Those who stint in clothes and food, and mortify their bodies, yet do not deeds of deathless virtue, and bestow nothing, hoarding shall suffer loss:— Lord of the cloud- capped hills !–this the hoarding honey-bee attests.

Naladiyar 10 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *