Skip to content

நாலடியார் – கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்

நாலடியார் - கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங் கொண்டீன்டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமேடொண்டொண்டொ டென்னும் பறை.

நாலடியார் 03 : 05

யாக்கை நிலையாமை

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்

பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங் கொண்டீன்

டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே

டொண்டொண்டொ டென்னும் பறை.

நாலடியார் 25 – சொல் பொருள் விளக்கம்

மணந்தவர் வாழ்க்கையை உண்டு உண்டு உண்டு என மகிழ்கின்றனர். பறையோ டொண்டு டொண்டு டொண்டு என்று இறந்தவர்களுக்கு முழங்குகிறது. இவ்வுலக வாழ்க்கையை அறவழியிற் பயன் படுத்திக்கொள்ள வேண்டுமே யல்லாமல், இதில் இன்பம் உண்டென்று மயங்கலாகாது.

கணம் கொண்டு – கூட்டம் கொண்டு, சுற்றத்தார் – உறவினர், கல் என்று அலற – கல்லென்று அலறி அழ, பிணம் கொண்டு – பிணத்தை எடுத்துக்கொண்டுபோய், காடு உய்ப்பார் கண்டும் – இடுகாட்டிற் கிடத்துவாரை நேரிற் பார்த்தும், மணம் கொண்டு – திருமணம் செய்து கொண்டு, ஈண்டு உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினான் – இவ்வுலகத்தில் இன்பம் உண்டு உண்டு உண்டு என்று கருதிம மயங்குகின்ற மயக்க உணர்வினையுடையானுக்கு, டொண் டொண் டொடு என்னும் பறை – டொண் டொண் டொடு என்று ஒலிக்கின்ற சாவு மேளம், சாற்றும் – அங்ஙனம் ஓரின்பம் இல்லை இல்லை இல்லை என்று சொல்லும்.

Death pours contempt on human joys.

To him, who, although he sees them bear the corpse to the burning ground, while friends in troops loudly lament, boldly asserts that wedded life is bliss on earth, the funeral drum speaks out, and mocks his vain utterance.

Naladiyar 25 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *