Skip to content

நாலடியார் – சென்றே எறிப ஒருகால்

நாலடியார் - சென்றே எறிப ஒருகால் ; சிறுவரைநின்றே எறிப பறையினை - நன்றேகாண்முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர்செத்தாரைச் சாவார் சுமந்து.

நாலடியார் 03 : 04

யாக்கை நிலையாமை

சென்றே எறிப ஒருகால் ; சிறுவரை

நின்றே எறிப பறையினை – நன்றேகாண்

முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர்

செத்தாரைச் சாவார் சுமந்து.

நாலடியார் 24 – சொல் பொருள் விளக்கம்

செத்தாரைச் சாகப்போகிறவர்கள் சுமந்துசென்று செத்தவர் உடலுக்குக்குத் தீ மூட்டி, மீள்வர். எண்ணி அறம் செய்வோம்.  இறந்த பின்னும் உடல் சிறிது நேரமேனும் வீட்டிலிருக்க இடமில்லாமையின், யாக்கையின் நிலையாமையைக் கருதி, உடனே அறவழிக்கண் நிற்க.

சென்று – இறந்தவர் வீட்டுக்குப் போய், எறிப ஒரு கால் – பறையடிப்போர் ஒருமுறை பறைகொட்டுவர், சிறுவரை நின்று – சிறிது பொழுது நிறுத்தி, எறிப பறையினை – மீண்டும் அச் சாவுமேளத்தைக் கொட்டுவர், முக்காலைக் கொட்டினுள் – மூன்றாம் முறையாகக் கொட்டுமுன், செத்தாரைச் சாவார் சுமந்து – இறந்தவரை இனி இறப்பவர் சுமந்துகொண்டு, மூடி தீ கொண்டு எழுவர் – துணியால் மூடித் தீயைக் கைக்கொண்டு இடுகாட்டுக்குப் புறப்படுவர், நன்றே – இந்நிலை இன்பந் தருவதோ, காண் – எண்ணுக.

The funeral.

They march and then strike once! A little while they wait, then strike the drum a second time. Behold, how fine! The third stroke sounds. They veil it, take the fire, and go forth :—the dying bear the deed!

Naladiyar 24 – English Translation

1 thought on “நாலடியார் – சென்றே எறிப ஒருகால்”

  1. வாசுதேவன்

    This poem in Naladiyar gives a clear picture of the temporariness of our worldly life. The people who are going to die sooner or later are doing the last (funeral) rites of a DEAD PERSON.

    “செத்தாரைச் சாவார் சுமந்து”. என்ன அருமையான வார்த்தைப் பிரயோகம்.
    தமிழைத் தவிர எந்த மொழியாலும் முடியாதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *