Skip to content

நாலடியார் – தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்

நாலடியார் - தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் ஆற்றஅறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்பிறந்தும் பிறவாதார் இல்

நாலடியார் – 01:07 – செல்வம் நிலையாமை

தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் ஆற்ற

அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்

பிறந்தும் பிறவாதார் இல்

நாலடியார் 7 – சொல் பொருள் விளக்கம்

மாய்வதை நீக்க மக்களால் முடியாது! ஞாயிறு ஒவ்வொருவருடைய வாழ்நாளையும் அவர் வைப்பிலிருந்து அளந்தெடுத்து வெளியில் கொட்டிக்கொண்டிருக்குறது. எனவே அறம் செய்து அருளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

கூற்றம் – யமன், தோற்றம் சால்ஞாயிறு, காலையில் தோன்றுதல் பொருந்திய பகலவனை, நாழி ஆக – நாழி என்னும் அளவுகருவியாகக்கொண்டு, நும் நாள் வைகலும் அளந்து உண்ணும் – உம் வாழ்நாளாகிய தானியத்தை நாள்தோறும் அளவு செய்து உண்ணுவான் ; ஆதலால் ; ஆற்ற அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் – மிகுதியாகப் பிறர்க்கு உதவி செய்து உயிர்களிடத்தில் அருளுடையீராகுக, யாரும் – அங்ஙனம் ஆகாதவர் யாரும், பிறந்தும் பிறவாதாரில் – பிறவியெடுத்தும் பிறவாதவரிற் சேர்ந்தவரே யாவர்.

Death inevitable!

Death every day takes that fount of light the sun as a measure, metes out your days, and so devours.Do deeds of virtue full of kindly grace. Though all are born, none are exempt from death.

Naladiyar 7 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *