Skip to content

நாலடியார் – நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்

நாலடியார் - நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்பு தளையும் அவிழ்ந்தன உள் காணாய் வாழ்தலின் ஊதியம் என் உண்டாம் வந்ததே ஆழ் கலத்து அன்ன கலுழ்

நாலடியார் – 02:02 – இளமை நிலையாமை

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்

அற்பு தளையும் அவிழ்ந்தன உள் காணாய்

வாழ்தலின் ஊதியம் என் உண்டாம் வந்ததே

ஆழ் கலத்து அன்ன கலுழ்

நாலடியார் 12 – சொல் பொருள் விளக்கம்

கடலில் கப்பல் மூழ்கும்போது நண்பர், நல்லார், அன்பு, ஊதியம் அனைத்தும் போம். வாழ்க்கை மூழ்கும் முதுமையிலும் அப்படித்தான்.

நட்பு நார் அற்றன – நேயமும் கயிறு அறுந்தன ; நல்லாரும் அஃகினார் – சான்றோரும் அணுக்கங் குறைந்தனர், அன்பு தளையும் அவிழ்ந்தன – பொது மக்களிடம் உண்டான அன்பு என்னுங் கட்டும் நெகிழ்ந்தன, உள் காணாய் – அகமாக எண்ணிப் பார், வாழ்தலின் ஊதியம் என் உண்டு – இளமையை மகிழ்ந்து வாழ்தலினால் பயன் என்ன உண்டு, ஆழ்கலத்து அன்ன கலி வந்தது – கடலில் மூழ்கிவிடுகின்ற மரக்கலத்தை ஒத்த துன்பம் இதோ வருகின்றது.

All is vanity

Served are the ties of friendship; minished are the pleasant ones; love’s bonds are loosened too; then look within and say, what profit is there in this joyous life of thine ? The cry comes up as from a sinking ship!

Naladiyar 12 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *