Skip to content

நாலடியார் – நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்

நாலடியார் - நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய் தடக்கிலென்பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்கூத்தன் புறப்பட்டக் கால்.

நாலடியார் 03 : 06

யாக்கை நிலையாமை

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்

பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;

தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்

கூத்தன் புறப்பட்டக் கால்.

நாலடியார் 26 – சொல் பொருள் விளக்கம்

 உயிர் நீங்கிய பின் உடம்பு இகழப்படுவ தொன்றாதலால், இவ்வுடலை ஓம்பி மகிழ்வதற்காக நற்செயல்களைக் கைவிடற்க.

தோல் பையுள் நின்று – தோலாலான பையாகிய உடம்பினுள் இருந்து, தொழில் அறச்செய்து ஊட்டும் – தொழில்களை முடியச் செய்து அவ்வுடம்பை உண்பித்து வருகின்ற, கூத்தன் – கூத்தனை ஒத்த உயிர், புறப்பட்டக்கால் – வெளிப்பட்டு விட்டபின், நார் தொடுத்து ஈர்க்கில் என் – அவ்வுடம்பை நாரினாற் கட்டி இழுத்தா லென்ன, நன்று ஆய்ந்து அடக்கில் என் – நன்றாகத் தூய்மைசெய்து அடக்கஞ்செய்தால் என்ன, பார்த்துழிப் பெய்யில் என் – கண்ட இடத்திற் போட்டா லென்ன, பல்லோர் பழிக்கில் என் – அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன ; வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை.

Body doesn’t matter after Death but your deed does

When the ‘soul’, that, taking its stand in this skin clad frame, has fully wrought its works, and partaken of life’s experiences, has gone forth, what matters it whether you attach ropes to the body and drag it away, or carefully bury it, or throw it aside in any place you light upon, or if many revile the departed ?

Naladiyar 26 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *