Skip to content

நாலடியார் – அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட

நாலடியார் 01:01 அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட

நாலடியார் 01:01செல்வம் நிலையாமை

அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட

மறு சிகை நீக்கி உண்டாரும் வறிஞராய்

சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று

உண்டாக வைக்கற்பாற்று அன்று

நாலடியார் 1 – சொல் பொருள் விளக்கம்

மனைவி ஊட்ட அறுசுவை உணவு உண்டவர், குடிக்கும் கூழுக்காக இரந்து அலைய நேரலாம். எனவே செல்வம் ஒருவனுக்கு உடைமை ஆகாது.

அறுசுவை உண்டி – அறுசுவையுள்ள உணவை, இல்லாள் – மனையாள், அமர்ந்து ஊட்ட – விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் – மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் – ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் – ஆதலின், செல்வம் ஒன்று – செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று – நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று.

Who today dine luxuriously tomorrow beg

Those who ate erewhile, course after course, food of six flavours, supplied by their complaisant spouse, now roam as paupers and beg a mess of pottage here and there; if so, let wealth be counted as a thing of nought!

Naladiyar 1 English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *