Skip to content

நாலடியார் – நின்றன நின்றன நில்லா என உணர்ந்து

நாலடியார் - நின்றன நின்றன நில்லா என உணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்கசென்றன சென்றன வாழ்நாள் செறுத்து உடன்வந்தது வந்தது கூற்று

நாலடியார் – 01:04 – செல்வம் நிலையாமை

நின்றன நின்றன நில்லா என உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்து உடன்

வந்தது வந்தது கூற்று

நாலடியார் 4 – சொல் பொருள் விளக்கம்

பொருள்கள் தொலைகின்றன. சாவு வருகின்றது. ஒருவரிடம் ஒன்றி நிற்பது அவர் செய்யும் அறமே. செல்வம் உள்ளபோதே அறம் செய்யவேண்டும்.

வாழ்நாள் – உடம்போடு கூடிவாழுமாறு ஏற்பட்ட நாட்கள், சென்றன சென்றன – செல்கின்றன செல்கின்றன; கூற்று – நமன், செறுத்து உடன் வந்தது வந்தது – சினந்து விரைந்து வருகின்றான் வருகின்றான் ; ஆதலால் ; நின்றன நின்றன – நிலைபெற்றன நிலைபெற்றனவென்று நினைத்துக்கொள்ளப்பட்ட செல்வப் பொருள்கள், நில்லா என – நிலைபெறா என்று, உணர்ந்து – தெரிந்து, ஒன்றின ஒன்றின – இசைந்தன இசைந்தனவாகிய அறங்கைள, செயின் – செய்யக் கருதுவீர்களானால், வல்லே செய்க – விரைந்து செய்வீர்களாக.

Do your duty, knowing the instability of all things.Time flies! Death comes!

The things of which you said, ‘they stand, they stand,’ stand not; mark this, and perform what befits, yea! what befits, with all your power! Your days are gone, are gone! and death close pressing on is come, is come!

Naladiyar 4 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *