Skip to content

நாலடியார் – படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றி

நாலடியார் - படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக்கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரைநேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

நாலடியார் 03 : 07

யாக்கை நிலையாமை

படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக்

கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் – தடுமாற்றம்

தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை

நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

நாலடியார் 27 – சொல் பொருள் விளக்கம்

 யாக்கையின் நிலைமை நீர்க்குமிழி போன்றதாதலால், பிறவித் தடுமாற்றத்தைத் தீர்க்க முயல்பவரே உயர்ந்தவராவர்.

படு மழை மொக்குளின் – மழை நீரில் தோன்றுகின்ற குமிழியைப்போல, பல்காலும் தோன்றிக் கெடும் இது ஓர் யாக்கை – பல தடவையும் தோன்றித் தோன்றி விரைந்து அழிந்து போகின்ற ஓருடம்பு இது. என்று எண்ணி – என்று இதன் இழிவு கருதி, தடுமாற்றம் தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை – இங்ஙனம் பிறவியில் தடுமாறுதலை யாம் நீக்க முயல்வேம் என்று மெய்யுணரும் உறுதியான அறிவுடையவரை, நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல்- ஒப்பவர் யாவர் இப்பெரிய நிலவுலகத்தில் ; ஒருவருமில்லை.

The body a bubble

‘Like a bubble, that in pelting rain appears full oft, and disappears, is this our frame.’ So sages have judged, steadfast in wisdom, and have decided to end this dubious strife. On this wide earth who equal these?

Naladiyar 27 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *