Skip to content

நாலடியார் – பனி படு சோலை பயன் மரம் எல்லாம்

நாலடியார் - பனி படு சோலை பயன் மரம் எல்லாம் கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று இளமை நனி பெரிதும் வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும் கோல் கண்ணள் ஆகும் குனிந்து

நாலடியார் – 02:07 – இளமை நிலையாமை

பனி படு சோலை பயன் மரம் எல்லாம்

கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று இளமை நனி பெரிதும்

வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும்

கோல் கண்ணள் ஆகும் குனிந்து

நாலடியார் 17 – சொல் பொருள் விளக்கம்

இன்று இவள் கண் வேல் போலப் பாய்கிறது. பின்னர் ஊன்றுகோலையே நோக்கும் காலம் வரும். எந்தக் கண்ணில் நீ வீழ்கிறாய்? இப்போது கனிந்தும் குளிர்ந்தும் தோன்றும் இளமை ஒரு காலத்தில் நிலைமாறிக் கெடும்.

இளமை – இளமைப் பருவம், பனி படு சோலை பயன் மரம் எல்லாம் – குளிர்ச்சி பொருந்திய சோலையிலுள்ள பயன் தரும் மரங்களெல்லாவற்றினின்றும், கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று – பழங்க ளுதிர்ந்து வீழ்ந்தாற்போலுந் தன்மையது ; இவளும் குனிந்து – இவ்விளமையுடையவளும் ஒரு காலத்திற் கூனாகி, கோல் கண்ணள் ஆகும் – வழிதெரிந்து நடப்பதற்கு ஊன்று கோலையே கண்ணாக உடையவளாவள். ஆதலால் ; வேல் கண்ணள் என்று – இப்பொழுது வேல்போலுங் கண்ணுடையாளென்று, இவளை – இந்த இளந்தன்மையாளை. நனி பெரிதும் வெஃகன்மின் – மிகப்பெரிரும் விரும்ப வேண்டாம்.

Fruit only ripens to fall. Youth leads to decay

The sweet fruit from every tree that bears in the dewy grove must fall to earth. Thus youth decays. Desire not her whose eyes gleam bright as darts. Full soon she too will walk bent down, with a staff to aid her dim sight.

Naladiyar 17 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *