Skip to content

நாலடியார் – புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி

நாலடியார் - புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியேநின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்சென்றான் எனப்படுத லால்.

நாலடியார் 03 : 09

யாக்கை நிலையாமை

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி

இன்னினியே செய்க அறவினை ; – இன்னினியே

நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்

சென்றான் எனப்படுத லால்.

நாலடியார் 29 – சொல் பொருள் விளக்கம்

வாழ்க்கை புல்நுனியில் தொங்கும் பனித்துளி போன்றது. எனவே நின்றான், இருந்தான், கிடந்தான், சென்றான் என்று இல்லாமல் அறவினை செய்தான் என்று இரு.  புல் நுனி நீர்போல உடம்பு நொடிப்பொழுதிலும் மாய்தல் நேர்தலின் உடனே நற்செயல்கள் செய்து கொள்க.

புல் நுனிமேல் நீர்போல் – புல் நுனியில் நிற்கும் நீர்த்துளி போன்றது, நிலையாமை – யாக்கை நிலையாமை யென்பது ; என்று எண்ணி – என்று கருதி, இன்இனியே – இப்பொழுதே – இப்பொழுதே, செய்க அறவினை – அறச்செயல்கள் செய்க, ஏனென்றால் ; இன் இனியே நின்றான் இருந்தான் கிடந்தான் – இப்போதுதான் ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான், தன் கேள் அலறச் சென்றான். உடனே தன் உறவினர் அலறி அழும் படி இறந்துவிட்டான், எனப்படுதலால் – என்று உலகத்திற் சொல்லாப்படுவதனால் என்க.

The body like dew on the tip of a blade of grass.

Considering that all things are transient as the dew-drop on the tip of a blade of grass, now, now at once, do virtuous deeds! “Even now he stood, he sat, he fell— while his kindred cried aloud he died :’ such is man’s history!

Naladiyar 29 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *