Skip to content

நாலடியார் – மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்

நாலடியார் - மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்எஞ்சினார் இவ்வுலகத் தில்.

நாலடியார் 03 : 01

யாக்கை நிலையாமை

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்

தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத்

துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்

எஞ்சினார் இவ்வுலகத் தில்.

நாலடியார் 21 – சொல் பொருள் விளக்கம்

வலிமையுடைய மன்னரும் மண்மேல் மடிவார். மலை போன்ற யானைமேல் மதி போன்ற குடையுடன் செல்லும் மன்னரும் துஞ்சத்தானே செய்வர்? எனவே இருக்கும்போதே இயன்ற உதவி செய். மக்களாய்ப் பிறந்தவர் எத்தகையோ ராயினும் அவர் இறந்து போதல் உறுதியாதலின், இருக்கும் போதே யாவரும் அறஞ் செய்து கொள்க.

மலைமிசை தோன்றும் மதியம்போல் – மலையின் உச்சியில் தோன்றுகின்ற முழு நிலாவைப்போல, யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் – யானையினது தலையின் மேல் கொள்ளப்பட்ட குடைநிழலிற் சென்ற அரசரும் , நிலமிசை – இந் நிலத்தில் , துஞ்சினார் என்று -இறந்து மண்ணானார் என்று, எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால் – குறித்து இழித்துரைக்கப்பட்டாரேயல்லாமல், எஞ்சினார் இவ்வுலகத்து இல் – இறவாமல் நின்றவர் இவ்வுலகத்தில் இல்லை.

Mighty kings die.

Even kings that rode on elephants beneath the state umbrella’s shade, like the moon appearing over some bill, have had their names proclaimed on earth as dead ;— not any in this world have escaped.

Naladiyar 21 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *