Skip to content

நாலடியார் – யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற

நாலடியார் - யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்றயாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கைமலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கேநிலையாது நீத்து விடும்

நாலடியார் 03 : 08

யாக்கை நிலையாமை

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற

யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை

மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கேநிலையாது நீத்து விடும்.

நாலடியார் 28 – சொல் பொருள் விளக்கம்

மலையிற் படரும் மஞ்சுபோல் மறையும் உடல். மலைமேல் மேயும் மாசிமேகம் போன்றது நம் யாக்கை. எனவே யாக்கை உள்ளபோதே அதன் பயனை இன்புற்று, இன்பம் தந்து துய்த்துக்கொள்க.

யாக்கையை – உடம்பை, யாப்பு உடைத்தாப் பெற்றவர் – உறுதியுடையதாகப் பெற்றவர், தாம் பெற்ற யாக்கையால் – தாம் அங்ஙனம் முன் நல்வினையினால் அரிதின் அடைந்த அந் நல்யாக்கையினால் , ஆய பயன் கொள்க- ஆகக்கூடிய புண்ணியப் பயனைக் காலந்தாழாமற் செய்து கொள்க. ஏனென்றால் ; மலை ஆடு மஞ்சுபோல் தோன்றி – மலையுச்சியில் உலவுகின்ற மேகம் போலக் காணப்பட்டு, மற்று ஆங்கே நிலையாது நீத்துவிடும் -பின்பு அங்ஙனம் காணப்பட்டபடியே நிலையாமல் இவ்வுடம்பு அழிந்துவிடும்.

The body like a cloud on the hillside.

Those who’ve gained and held fast by this well-knit frame (a human body) should take the gain the body they have gained is intended to yield. Like a cloud that wanders over the hills, the body here appears, and abiding not, departs leaving no trace behind.

Naladiyar 28 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *