Skip to content

நாலடியார் – வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்

நாலடியார் - வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ; யாரும்நிலவார் நிலமிசை மேல்.

நாலடியார் 03 : 02

யாக்கை நிலையாமை

வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்

வீழ்நாள் படாஅ தெழுதலால் – வாழ்நாள்

உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ; யாரும்

நிலவார் நிலமிசை மேல்

நாலடியார் 22 – சொல் பொருள் விளக்கம்

ஒளிமண்டிலமாகிய பகல் ஒருவருடைய வாழ்நாளைக் கழிக்கும் அலகு (அளவுகோல்). எனவே இருக்கும்போதே உலகத்தோடு ஒத்து வாழ்ந்து உலகுக்கு உதவுக. கதிரவன் நாடோறுந் தோன்றுதலால் நாட்கணக்குத் தெரிதலின், அக் கணக்குக் கொண்டு வாழ்நாள் கழியுமுன் அறஞ் செய்துகொள்க.

வாழ்நாட்கு – ஆயுள்நாட்களுக்கு, அலகா – அளவு காணும்படி, வயங்கு ஒளி மண்டிலம் – விளக்குகின்ற கதிரவன் என்னும் ஒளிவட்டம், வீழ்நாள் படாது எழுதலால் – வீண் நாள் படாமல் தொடர்பாகக் தோன்றி வருவதனால், வாழ்நாள் உலவாமுன் – அம் முறையே கணக்கிடப்பட்டு ஆயுள்நாள் அற்றுப்போகுமுன், ஒப்புரவு ஆற்றுமின் – உதவி செய்யுங்கள்; மேல் – அந்த ஆயுள் நாளுக்குமேல், யாரும் நிலவார் நிலமிசை – யாரும் இவ்வுலகத்தில் நிலைக்கமாட்டார்கள்.

Time flies, use wisely

As the measure of your days the shining orb each day unfailing rises; so before your joyous days have passed away, perform ye ‘fitting deeds of grace’; for none abide on earth.

Naladiyar 22 – English Translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *