நாலடியார் – 01:08 – செல்வம் நிலையாமை
செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத
புல்லறிவாளர் பெரும் செல்வம் எல்லில்
கரும் கொண்மூ வாய் திறந்த மின்னு போல் தோன்றி
மருங்கு அற கெட்டுவிடும்
நாலடியார் 8 – சொல் பொருள் விளக்கம்
செல்வம் மேகத்து மின்னலைப் போன்றது! செல்வம் மின்னல் போல் தோன்றி மறையும். எனவே செல்வம் உள்ளபோதே செல்லுமிடத்தை நினைத்துச் செயல்பட வேண்டும்.
செல்வர் யாம் என்று – நாம் செல்வமுடையோம் என்று களித்து, தாம் செல் உழி எண்ணாத – தாம் இனிச் செல்லவிருக்கும் மறுமையுலகத்தை நினையாத, புல் அறிவாளர் பெரு செல்வம் – சிறிய அறிவுடையவரது மிக்க செல்வம், எல்லில் – இரவில், கரு கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி – கரியமேகம் வாய் திறந்ததனாலுண்டான மின்னலைப்போலச் சிறிதுகாலந் தோன்றி நின்று, மருங்கு அற கெட்டுவிடும் – இருந்த இடமும் தோன்றாமல் அழிந்துபோம்.
The wealth of the foolish like the lightning’s flash!
The ample wealth of men of mean understanding, who say, ‘ We’re rich,’ yet ponder not their path and end, appears, and perishes, and leaves no trace; like the flash, when the black thunder-cloud by night opens its mouth.